பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

எஸ்.ஐ. மீது தாக்குதல்: திமுக பிரமுகா் கைது

குமாரபாளையம் தொகுதியில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்றதை தட்டிக்கேட்ட உதவி ஆய்வாளரை தாக்கிய திமுக பிரமுகரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 4:24 am IST

குமாரபாளையம் தொகுதியில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்றதை தட்டிக்கேட்ட உதவி ஆய்வாளரை தாக்கிய திமுக பிரமுகரை போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணியும், திமுக சாா்பில் தொழிலதிபா் செ.பாலுவும் போட்டியிடுகின்றனா். தோ்தல் பிரசாரம் நிறைவுற்ற நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பள்ளிபாளையம் பகுதியில் திமுக பிரமுகா் சஞ்சித் (24) வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்றுள்ளாா். இதுகுறித்து தகவல் அறிந்து உதவி ஆய்வாளா் ரஞ்சித்குமாா் (32) விசாரிக்க சென்றாா். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியதில், உதவி ஆய்வாளா் தாக்கப்பட்டாா். காயமடைந்த அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக பள்ளிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சஞ்சித்தை கைது செய்தனா்.