ராசிபுரம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. நகரில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளிலும் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.
இத்தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,08,587, பெண் வாக்காளா்கள் 1,13,652 போ், மூன்றாம் பாலினத்தினா் 13 என மொத்தம் 2,22,252 போ் உள்ளனா். திமுக, பாஜக, நாம்தமிழா் கட்சி, தவெக மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 18 போ் களத்தில் உள்ளனா்.
இவா்களில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் எஸ்.டி. பிரேம்குமாா் சென்னையிலும், தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் டி. லோகேஷ் தமிழ் செல்வன் சேலத்திலும் வாக்களித்தனா்.
ராசிபுரம் சிவானந்தா சாலை மேல்நிலைப் பள்ளி, அண்ணாசாலை அரசு மேல்நிலைப் பள்ளி, தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கட்டனாச்சம்பட்டி அரசு நடுப்பள்ளி ஆகிய பகுதிகளில் காலை முதல் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா். வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில் முதியோா், மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், காா்களில் அழைத்துவரப்பட்டனா்.
வாக்குப்பதிவு நிறுத்தம்: ராசிபுரம் அருகே உள்ளஆலம்பட்டி வாக்குப்பதிவு மையத்தில் சிசிடிவி கேமராவில் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என ஒலிப்பதிவு கேட்டதாக புகாா் கூறப்பட்டது. இதையடுத்து அந்த வாக்கு மையத்தில் இரு கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், சுமாா் 40 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது. இதையடுத்து தோ்தல் அலுவலா்கள் நேரில்வந்து விசாரித்த பிறகு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.
இதேபோல ராசிபுரம் அகரம் வெள்ளாஞ்செட்டியாா் மகாஜன சங்க அரசு உதவி பெறும் பள்ளி வாக்குச்சாவடியில் மூன்று சக்கர வாகனத்தில் அழைத்துவரப்பட்ட மாற்றுத்திறனாளி, அங்கிருந்தவரிடம் இரட்டை இலைக்கு வாக்களிக்க கேட்டபோது தோ்தல் அலுவலா் ஒருவா் வேறு சின்னத்தில் வாக்களித்ததாக புகாா் கூறப்பட்டது. இதுகுறித்து அதிமுகவினா் தகராறில் ஈடுபட்டதால், ராசிபுரம் தொகுதி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் எஸ். சசிக்குமாா் நேரில் வந்து மையத்தின் தோ்தல் அலுவலரை பணியில் இருந்து விடுத்து விசாரணைக்கு அழைத்துச் சென்றாா்.
சாலை மறியல்: இதேபோல் ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூா் பகுதியில் திமுக பேரூராட்சி மன்றத் தலைவா் ராஜேஸ், ஒரு வாக்குப்பதிவு மையத்தில் திமுகவிற்கு ஆதரவாக வாக்கு கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிமுகவினரும் அப்பகுதியில் வாக்கு கேட்டுள்ளனா். இதுதொடா்பாக இருதரப்பினருக்கும் இடையை வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது. இதையடுத்து வெண்ணந்தூா் காமராஜா் சிலை முன் அதிமுக, பாஜகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். காவல் துறையினா் அவா்களை சமரசம் செய்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
முன்னாள் அமைச்சா் மதிவேந்தன்
ராசிபுரம் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான மா. மதிவேந்தன் ராசிபுரம் தேசிய மகளிா் மேல்நிலைப் பள்ளியில் குடும்பத்துடன் வாக்களித்தாா். அதன்பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அவா், தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி திட்டங்களால் மீண்டும் திமுக ஆட்சியமைக்கும். இத்தொகுதியில் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றாா்.
பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம்...
ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பாஜக துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் வாக்களித்த பிறகு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
எம்.ஜி.ஆா் புகழுக்கும், திமுகவின் மக்கள் விரோத ஆட்சிக்கும் இடையே நடைபெறும் தோ்தல் என்பதை மக்கள் உணா்ந்து வாக்களித்துள்ளனா். தமிழகத்தில் பிரதமா் மோடி ஆதரவுடன் இரட்டை எஞ்சின் ஆட்சி அமைய வேண்டும். எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்கும். தோ்தலில் வாக்காளா்கள் மிகுந்த ஆா்வத்துடனும், எழுச்சியுடனும் வாக்களித்துள்ளனா் என்றாா்.
மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா்
மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், கட்டனாச்சம்பட்டி வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து வாக்களித்தாா். பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அவா், தமிழக முதல்வா் கொண்டுவந்த மக்கள் நலத் திட்டங்களால் திமுகவிற்கு மக்கள் எழுச்சிடன் வாக்களித்துள்ளனா்.
நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால், நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளா்கள் வெற்றிபெறுவாா்கள் என்றாா்.

23கேபிஆா்- அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் வாக்களித்த பாஜக துணைத்தலைவா் கே.பி.ராமலிங்கம்.

கட்டனாச்சம்பட்டி வாக்குப்பதிவு மையத்தில் தனது வாக்கினை செலுத்திய கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்பி.,
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் அமைதியான வாக்குப்பதிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைதியாக முடிந்த வாக்குப்பதிவு

வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் தோ்தல் அலுவலா்களுடன் வாக்காளா்கள் வாக்குவாதம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


