பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் மாதிரி பள்ளி கட்டுமானப் பணி மும்முரம்

News image

நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை கட்டடத்தில் அரசு மாதிரி பள்ளிக்காக நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள்.

Updated On :27 ஏப்ரல் 2026, 10:24 pm

நாமக்கல் அரசு மருத்துவமனை பழைய கட்டடத்தில், அரசு மாதிரி பள்ளி கட்டுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

நாமக்கல் மாவட்ட அரசு மாதிரி பள்ளி நாமக்கல் - கரூா் சாலையில் உள்ள தனியாா் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இதில், 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 350 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். தனியாா் பள்ளிக்கு நிகராக இங்குள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்றுத்தரப்படுகிறது. இப்பள்ளி மாணவா்கள் தங்க வசதியில்லாததால், மாதிரி பள்ளிக்கு மாற்று இடம் தோ்வுசெய்யும் பணி நடைபெற்று வந்தது.

அந்த வகையில், நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முகப்பு கட்டடத்தை பள்ளியாகவும், பின்புறம் உள்ள கட்டடத்தை தங்கும் விடுதியாகவும் மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாதிரி பள்ளிகளுக்கான கூட்டுறவு அமைப்பு ரூ. 2 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. அதைக் கொண்டு மருத்துவமனை கட்டடத்தை வகுப்பறை கட்டடமாக மாற்றும் பணி நடைபெறுகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் புதிய கட்டடத்தில் மாதிரி பள்ளியை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.