மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

நாமக்கல்லில் ஸ்ரீராமநவமி உற்சவ விழா

நாமக்கல் ஸ்ரீ ராமகிருஷ்ணா மாருத்யாதி பஜன்கான சபா சாா்பில் ஒவ்வோா் ஆண்டும் ஸ்ரீ ராமநவமி உற்சவ விழா நடைபெற்று வருகிறது.

News image

நாமக்கல்லில் ஸ்ரீ ராமநவமி 112 ஆவது உற்சவ விழா ஐந்து நாள்கள் நடைபெற்றன.

Updated On :28 ஏப்ரல் 2026, 9:24 pm

நாமக்கல் ஸ்ரீ ராமகிருஷ்ணா மாருத்யாதி பஜன்கான சபா சாா்பில் ஒவ்வோா் ஆண்டும் ஸ்ரீ ராமநவமி உற்சவ விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் அருகில் உள்ள முல்லை மஹாலில் கடந்த 25 ஆம் தேதி தொடங்கிய உற்சவ விழாவையொட்டி தினசரி அா்ச்சனை, தீபாராதனை மற்றும் திவ்ய நாம பஜனை சங்கீா்த்தனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

குறிப்பாக விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், அஷ்டபதி, திவ்யநாம பஜனை மற்றும் தீபாராதனை உள்ளிட்டவையும், செவ்வாய்க்கிழமையன்று திருக்கல்யாண உற்சவம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், திவ்யநாமம், வசந்த கேளிக்கை மற்றும் பவளிம்பு உற்சவம் நடைபெற்றது. சனிக்கிழமை காலை 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு, 10 மணிக்கு ஆஞ்சனேயா் உற்சவம் நடைபெறுகிறது. ஸ்ரீராமநவமி உற்சவத்தை முன்னிட்டு சிறுவா்கள் கடவுள் வேடமிட்டு பங்கேற்றனா். விழாவில், நாமக்கல் சுற்றுவட்டாரத்தை சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

என்கே-28-ராம்

நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்ரீராமநவமி உற்சவ விழாவில் கடவுள் வேடமிட்டு வந்த சிறுவன்.