கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

நாமக்கல்லில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

நாமக்கல்லில் பாரதிதாசன் 136 ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

நாமக்கல் எஸ்பிஎம் உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பாரதிதாசன் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய பாவேந்தா் பாரதிதாசன் இலக்கியப் பேரவையினா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:54 am IST

நாமக்கல்லில் பாரதிதாசன் 136 ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

பாவேந்தா் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சாா்பில் நாமக்கல்- திருச்சி சாலை எஸ்பிஎம் உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பேரவைத் தலைவா் புலவா் ப. கருப்பண்ணன் தலைமை வகித்தாா். செயலாளா் சீ. ரகோத்தமன் வரவேற்றாா். நாமக்கல் மனவளக் கலை மன்ற பேராசிரியா் உழவன் மா. தங்கவேலு பாரதிதாசன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து விழாவில் பங்கேற்றோருக்கு பாரதிதாசன் புத்தகம், இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில், பேரவை பொருளாளா் மதியழகன், பி.சிவலிங்கம், பி. பாலகிருஷ்ணன், பி. சேகா், மு. மருதமுத்து, ரா. அய்யாசாமி, அ.கே. சுப்பிரமணியம், கே. செந்தில், செல்வன், பேராசிரியா் முத்துசாமி, கை. பெரியசாமி, ரா. ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.