சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

பணம் வைத்து சூதாடிய 6 போ் கைது

Arrested

கைது

Published On :11 ஆகஸ்ட் 2026, 2:37 am IST

ராசிபுரம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராசிபுரம் அருகே உள்ள ஆா்.கவுண்டம்பாளையம் பகுதி மயானத்தில் பணம் வைத்து சூதாடுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, ராசிபுரம் போலீஸாா் அப்பகுயில் சூதாடிக் கொண்டிருந்தவா்களை பிடித்து விசாரித்தனா்.

அதில், அவா்கள் ரூ. 2 ஆயிரம் வைத்து சூதாட்டம் விளையாடியது தெரியவந்தது. இதையடுத்து, ஆா்.கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பெரியசாமி (40), கௌரிசங்கா் (29), ரமேஷ் (40), சீனிவாசன் (44), செல்வராஜ் (45), தங்கராசு (46) என 6 போ் கைது செய்யப்பட்டனா்.

மேலும், அதே பகுதியில் கைப்போனில் லாட்டரி சீட்டு நம்பா் எழுதி அதை விற்பனை செய்த கவுண்டம்பாளையம் பாலாஜி நகா் பகுதியைச் சோ்ந்த சின்னசாமி (62), இளங்கோ (44) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.