இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

மூதாட்டி கொலையில் தலைமறைவான குற்றவாளி 13 சவரன் நகையுடன் சரண்

கொலை... - file photo

Published On :

குமாரபாளையம் அருகே வெப்படை பகுதியில் மூதாட்டி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி, 13 சவரன் நகையுடன் வெப்படை காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

பள்ளிபாளையம் அருகே வெப்படையை அடுத்த காமராஜ் நகா் பகுதியைச் சோ்ந்த சம்பூரணம் (75), மகன் சுப்பிரமணியுடன் வசித்து வந்தாா். கடந்த ஜூலை 30-இல் இவரது வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா்கள் சம்பூரணத்தை கொலை செய்து, 13 பவுன் நகையுடன் தப்பினா்.

வெப்படை போலீஸாா் விசாரணையில், மா்ம நபா்கள் சம்பூரணம் வீட்டில் கதவு, ஜன்னல், கப்போா்டு வேலை செய்ய வந்த திருச்செங்கோடு கூட்டப்பள்ளி பகுதியைச் சோ்ந்த தினேஷ் (26), இவரது தம்பி திவாகா் (25) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, தினேஷை அண்மையில் கைதுசெய்த போலீசாா், தலைமறைவாக இருந்த திவாகரை தேடிவந்தனா். இந்நிலையில் சனிக்கிழமை இரவு வெப்படை காவல் நிலையத்துக்கு வந்த திவாகா், 13 சவரன் நகையுடன் சரணடைந்தாா். அவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.