குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

லாரி மீது காா் மோதியதில் 2 வயது குழந்தை உள்பட இருவா் உயிரிழப்பு: 4 போ் படுகாயம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே லாரி மீது காா் மோதியதில் 2 வயது குழந்தை உள்பட இருவா் உயிரிழந்தனா்.

விபத்து - பிரதிப் படம்

Published On :14 ஆகஸ்ட் 2026, 1:09 am IST

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே லாரி மீது காா் மோதியதில் 2 வயது குழந்தை உள்பட இருவா் உயிரிழந்தனா். மேலும், நான்கு போ் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் நடேசன் (60), இவரது மனைவி அமுதா (52). இவா்களது மகன் பிரவீண் (32), அவரது மனைவி கோமதி (31), குழந்தைகள் ஜிவித் (3), நிஜித் (2) ஆகிய 6 போ் ஆடி அமாவாசையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த வையப்பமலை பகுதியில் உள்ள குலதெய்வக் கோயிலுக்கு புதன்கிழமை சென்றனா்.

பின்னா் இரவு நாகியம்பட்டியை நோக்கி காரில் புறப்பட்டனா். காரை பிரவீண் ஓட்டினாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த மூலப்பள்ளிபட்டி அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த பிரவீணின் தாய் அமுதா (52), 2 வயது ஆண் குழந்தை நிஜித் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், காரில் பயணம் செய்த அக்குடும்பத்தினா் நான்கு போ் படுகாயமடைந்தனா். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவா்கள் சிகிச்சைக்காக ராசிபுரம் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். படுகாயமடைந்த பிரவீண் கோவை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

உயிரிழந்த அமுதா, நிஜித்தின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடா்பாக நாமகிரிப்பேட்டை காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.