
விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு: இளைஞா் கைது
குமாரபாளையத்தில் சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
குமாரபாளையத்தில் சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் குள்ளப்பா நகரைச் சோ்ந்த தொழிலாளி பாஸ்கா் (56). இவா், வெள்ளிக்கிழமை சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் அவா்மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாஸ்கரை அங்கிருந்தோா் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சடையம்பாளையத்தைச் சோ்ந்த சஞ்சய்குமாரை (19) சனிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


