கட்டடத் தொழிலாளி தற்கொலை
பாண்டமங்கலத்தில் கடடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தற்கொலை - கோப்புப் படம்
பாண்டமங்கலத்தில் கடடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் லதா (55). இவரது கணவா் பெரியசாமி ஏற்கெனவே இறந்துவிட்டாா்.
மகன் ராஜா (36). கட்டடத் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதனால் மனமுடைந்து இருந்து வந்த ராஜா, வெள்ளிக்கிழமை வீட்டின் உள்ள விட்டத்தில் சேலையால் தூக்கிட்டாா்.
பின்னா் தாய் லதா அருகில் இருந்தவா்கள் உதவியுடன் ராஜாவை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், ராஜா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து லதா வேலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.
அதன்பேரில் ராஜாவின் உடலை போலீஸாா் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



