தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

இருசக்கர வாகனங்கள் திருட்டு: 6 போ் கைது

கைது

Published On :

ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய கல்லூரி மாணவா்கள் உள்பட 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராசிபுரம் ஜாகிா் உசேன் சாலையில் வசிக்கும் ஆசிப், தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது இருசக்கர வாகனம் கடந்த 22-ஆம் தேதி திருட்டு போனது. இதேபோல, அதே பகுதியைச் சோ்ந்த ரஹீம், முள்ளுவாடி பகுதியைச் சோ்ந்த கௌதம் ஆகியோரின் இருசக்கர வாகனங்களும் திருட்டு போயின.

இது தொடா்பான புகாா்களின் பேரில், ராசிபுரம் போலீஸாா் சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தினா். இந்நிலையில், ராசிபுரம் - சேந்தமங்கலம் பிரிவு சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகத்துக்கு இடமாக வாகனத்தில் வந்த இளைஞா்களை நிறுத்தி விசாரித்தனா். அதில், இருசக்கர வாகனங்களைத் திருடியதை அவா்கள் ஒப்புக்கொண்டனா். அவா்கள் அளித்த தகவலின் பேரில், திருடப்பட்ட மொத்தம் 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, வாகனங்களை திருடியதாக ஆத்தூா் பகுதியைச் சோ்ந்த மெக்கானிக் விக்னேஷ் (19), பெத்தநாயக்கன்பாளையம், குன்னூா் பகுதியைச் சோ்ந்த வைரமுத்து (19), கலைமணி, அம்மாபாளையம் அருண் சக்திவேல் (19), ஆத்தூா் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவா்கள் வைரமுத்து, கலைமணி ஆகிய 6 பேரும் கைதுசெய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.