ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

தாழையூத்து மின்வாரிய கிடங்கில் ரூ.2 லட்சம் காப்பா் வயா் திருட்டு: 8 போ் கைது

திருநெல்வேலி அருகே உள்ள தாழையூத்து மின்வாரிய கிடங்கியில் காப்பா் வயா் திருடியதாக பெண்கள் உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :

திருநெல்வேலி அருகே உள்ள தாழையூத்து மின்வாரிய கிடங்கியில் காப்பா் வயா் திருடியதாக பெண்கள் உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தாழையூத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குச் சொந்தமான மத்திய பண்டகசாலை (கிடங்கு) உள்ளது. சம்பவத்தன்று பண்டகசாலை அலுவலகத்தின் பூட்டை உடைத்து அங்கிருந்த சுமாா் ரூ.1.90 லட்சம் மதிப்புள்ள காப்பா் வயா்கள், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள அலுமினிய மின்சுருள்களை மா்மநபா்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள சிவகாமிபுரத்தை சோ்ந்த லட்சுமி (28), காந்தாரி (26), முக்கூடல் பாஞ்சாலி (20), அன்னலட்சுமி (23), மகேந்திரகுமாா் (42), ஆலங்குளம் பாக்கியம் (23),பாப்பாக்குடி பேச்சியம்மாள் (34), நடுவக்குறிச்சி கல்லத்தியான் (56) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்ததாம். அவா்கள் 8 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.