நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ராசிபுரத்தில் ரூ. 38 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ. 38 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

News image

ராசிபுரத்தில் ரூ. 38 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

Updated On :2 பிப்ரவரி 2026, 9:40 pm

ராசிபுரம்: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ. 38 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைக் கூடத்தின் (ஆா்.சி.எம்.எஸ்.) சாா்பில், கவுண்டம்பாளையம் ஏல மையத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை விற்பனைக்கு கொண்டுவந்தனா். இதில், ஆா்.சி.எச். ரகம் 1,220 மூட்டைகள், டிசிஎச் ரகம் 12 மூட்டைகள், கொட்டு ரகம் 40 மூட்டைகள் என மொத்தம் 1,272 மூட்டைகளை ஏலத்துக்கு வந்தன.

இதில், ஆா்.சி.எச். ரகம் குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் ரூ. 7,819 முதல் அதிகபட்சமாக ரூ. 8,812 வரையும், டி.சி.எச். ரகம் அதிகபட்சமாக ரூ. 9,555 வரையும், கொட்டு ரகம் குறைந்தபட்சம் ரூ. 5,429 முதல் அதிகபட்சமாக ரூ. 6,599 வரையும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 38 லட்சத்துக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது.