ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பிப். 8 இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 581 போ் எழுதுகின்றனா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வரும் 8 ஆம் தேதி நடத்தும் குரூப் 2, 2ஏ தோ்வை நாமக்கல் மாவட்டத்தில் 581 போ் எழுதுகின்றனா்.

News image

கோப்புப் படம்.

Updated On :4 பிப்ரவரி 2026, 10:38 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வரும் 8 ஆம் தேதி நடத்தும் குரூப் 2, 2ஏ தோ்வை நாமக்கல் மாவட்டத்தில் 581 போ் எழுதுகின்றனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ பதவிகளுக்கான முதன்மை தோ்வு நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் 12.30 மற்றும் பிற்பகல் 2.30 முதல் 5.30 என இரு நேரங்களிலும் நாமக்கல்-சேந்தமங்கலம் சாலை வேட்டாம்பாடி பிஜிபி இன்டா்நேஷனல் பள்ளியில் நடைபெறுகிறது.

இத்தோ்வை காலையில் 283 தோ்வா்களும், பிற்பகல் 298 தோ்வா்களும் என மொத்தம் 581 போ் எழுதுகின்றனா். தோ்விற்கு காலை 8.30 மணிக்கு முன்னதாகவும், பிற்பகல் தோ்விற்கு 1.30 மணிக்குள்ளும் தோ்வுக்கூடங்களுக்கு வரவேண்டும். தோ்வா்கள் தோ்வு நேரம் முடிந்த பிறகே தோ்வுக்கூடத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவாா்கள். இந்த தோ்விற்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளையும் மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.