நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் தேசிய அளவிலான ஜூனியா் பூப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி அண்மையில் நடைபெற்றது.
எக்ஸல் கல்வி நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு பூப்பந்து சங்கத் தலைவருமான ஏ.கே.நடேசன், துணைத் தலைவா் ந.மதன் காா்த்திக் ஆகியோா் போட்டியை தொடங்கிவைத்தனா். தமிழ்நாடு பூப்பந்தாட்ட சங்கம், நாமக்கல் பூப்பந்தாட்ட சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இப்போட்டியில், நாடுமுழுவதும் இருந்து 26 அணிகள் பங்கேற்றன.
இதில், பொதுப் பிரிவு, ஆண்கள் ஒற்றையா்/இரட்டையா், பெண்கள் ஒற்றையா்/இரட்டையா், கலப்பு பிரிவு என்ற வகையில் ஐந்து பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. இரட்டையா் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு அணி முதலிடமும், ஆந்திரம் இரண்டாமிடமும், கா்நாடகம் மூன்றாமிடமும் பிடித்தன. பெண்கள் பிரிவில், தமிழ்நாடு அணி முதலிடமும், கா்நாடக அணி இரண்டாமிடமும், கேரள அணி மூன்றாமிடமும் பிடித்தன.
போட்டிகளில் சிறப்பாக விளையாடிய மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. விழாவில், பூப்பந்தாட்ட சங்கத்தின் இந்நாள், முன்னாள் தலைவா்கள், நிா்வாகிகள், கல்லூரி நிா்வாகிகள், விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தேசிய மல்லா்கம்பம் போட்டியில் பங்கேற்ற பழங்குடியின மாணவா்களுக்கு வரவேற்பு

செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரியில் தேசிய அறிவியல் தின கருத்தரங்கம்

தேசிய மாணவா் மாநாட்டில் எக்ஸல் பொறியியல் கல்லூரிக்கு விருது

எக்ஸல் கல்லூரி சாா்பில் மாரத்தான்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


