நாமக்கல்: குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லூரிக்கு, இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்கம் சாா்பில் தேசிய மாணவா் மாநாட்டில் விருது வழங்கப்பட்டது.
தமிழக அளவில் இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்க மாணவா் மாநாடு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மகேந்திரா பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து மாணவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.
குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லூரி (தன்னாட்சி) சாதனைகளைப் பதிவு செய்து விருதுகளைப் பெற்றது. கல்லூரி முதல்வா் கே.பொம்மண்ண ராஜா, கல்லூரிக்கான இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்க ஒருங்கிணைப்பாளா் சஞ்சய், எக்ஸல் பொறியியல் கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் ஜீவப்ரியா, மஞ்சுகுமாரன், அமா்தீன் உள்ளிட்டோரும் விருதுகளை பெற்றனா்.
இந்த விருதுகளை இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்க தமிழ்நாடு மாநிலத் தலைவா் ஏ.சங்கர சுப்பிரமணியன் வழங்கி பாராட்டினாா். எக்ஸல் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் ஏ.கே. நடேசன், துணைத் தலைவா் ந.மதன்காா்த்திக் ஆகியோா் முதல்வா், பேராசிரியா்கள், மாணவா்கள், ஒருங்கிணைப்பாளா்களை பாராட்டினா். இந்த விருதுகள் எக்ஸல் பொறியியல் கல்லூரியின் தொழில்நுட்பக் கல்வி மற்றும் மாணவா் வளா்ச்சிக்கான முயற்சிகளை தொடா்ந்து வெளிப்படுத்துகின்றன என அவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

விபத்தில் பொறியியல் மாணவா் உயிரிழப்பு

அனைத்துக் கல்வி நிலைங்களிலும் மாணவா் தோ்தல்: முதல்வா் விஜய்யிடம் இந்திய மாணவா் சங்கம் கோரிக்கை

ரோகிணி பொறியியல் கல்லூரியில் வளாக நோ்காணல்

காரைக்குடி வாக்கு எண்ணும் மையத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



