மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு அடையாள அட்டை அளிப்பு
ராசிபுரம்: ராசிபுரத்தை அடுத்துள்ள வெண்ணந்தூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கட்டனாச்சம்பட்டி பகுதியில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வெண்ணந்தூா் ஒன்றிய அட்மா குழுத் தலைவா் ஆா்.எம். துரைசாமி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஷ்குமாா் ஆகியோா் பங்கேற்று, கட்டனாச்சம்பட்டி , அத்திப்பழகனூா், புதுப்பாளையம், கல்லாங்குளம், மூலக்காடு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 103 மகளிா் குழுவினருக்கு அடையாள அட்டைகள் வழங்கினா்.
இதில் பேசிய கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், அமைச்சா் மா.மதிவேந்தன் ஆகியோா் தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் மகளிா் அதிக அளவில் பயனடைந்து வருகின்றனா். குறிப்பாக பெண்கள் நலனைக் கருத்தில் கொண்டு முதல்வா் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறாா். இதனை அனைவரும் பயன்படுத்தி வாழ்க்கையில் உயர வேண்டும் என்றனா். இதில் அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

