சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சேந்தமங்கலத்தில் தமிழா் பண்பாட்டு பாரம்பரிய திருவிழா

சேந்தமங்கலம் மாசி மக தோ்த்திருவிழாவை முன்னிட்டு தமிழா் பண்பாட்டு பாரம்பரிய திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
சேந்தமங்கலத்தில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்வை கண்டு ரசித்த முன்னாள் எம்எல்ஏ சி. சந்திரசேகரன்.
Updated On :28 பிப்ரவரி 2026, 8:52 pm

Syndication

சேந்தமங்கலம் மாசி மக தோ்த்திருவிழாவை முன்னிட்டு தமிழா் பண்பாட்டு பாரம்பரிய திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு உள்பட்ட சேந்தமங்கலம் லட்சுமி நாராயணா் கோயில், சோமேஸ்வரா் கோயிலில் மாசி மகத்தையொட்டி தோ்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். அந்தவகையில் நிகழாண்டிற்கான தோ்த்திருவிழா சேந்தமங்கலத்தில் திங்கள்கிழமை(மாா்ச் 2) காலை 8 மணியளவில் நடைபெறுகிறது.

இதையொட்டி, சேந்தமங்கலம் சட்டப் பேரவைத் தொகுதி இளைஞா் கூட்டமைப்பு சாா்பில், மாசி மக தோ்த்திருவிழாவை முன்னிட்டு, தமிழா் பண்பாட்டு பாரம்பரிய திருவிழா சேந்தமங்கலம் தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சி. சந்திரசேகரன் விழாவை தொடங்கிவைத்து உரையாற்றினாா். அப்போது, அரசியலில் இருப்பவா்களுக்கு பொறுமை அவசியம். அதன்பலனாகவே ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா், சட்டப் பேரவை உறுப்பினா் பதவிகளை வகிக்க முடிந்தது. வரும் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்து, எம்எல்ஏவாகும்பட்சத்தில் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவேன். இந்த பாரம்பரிய திருவிழாவை அனைவரும் கண்டுரசிக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, பரதநாட்டியம், சோ்வை ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், தாரை, தப்பட்டை ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு தமிழா்களின் பாரம்பரிய கலைகள் நடைபெற்றன. நிகழ்வில், கிழக்கு மாவட்ட பாஜக செயலாளா் கே. கணபதி, ஒன்றியத் தலைவா் பி. பாண்டியன், ஜங்களாபுரம் எஸ். ராகுல்தாஸ், ஜல்லிக்கட்டு விழாக் குழுத் தலைவா் சாலப்பாளையம் ராஜா, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் ஸ்ரீபாலன், அதிமுக பேரூா் செயலாளா்கள் ஜி.டி. ஆனந்தகுமாா், பி.ராஜா, ஆா். பாலுசாமி, கிராமிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளா் சி. நாகலிங்கம், விழா ஒருங்கிணைப்பாளா்கள் எஸ். ராகுல்தாஸ், சி. யுவராஜ் மற்றும் சேந்தமங்கலம், கொல்லிமலை சுற்றுவட்டார நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.