நாமக்கல்
வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு வயல்வெளி பயிற்சி
நாமக்கல் பிஜிபி வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு ராசிபுரம், முள்ளுக்குறிச்சி பகுதிகளில் வயல்வெளி பயிற்சி மேற்கொண்டனா்.
ராசிபுரத்தை அடுத்த ஆண்டகளுா்கேட் பகுதியில் விவசாயம் சாா்ந்த நிலக்கடலை, தேங்காய், எள் போன்றவற்றை மூலப்பொருளாக கொண்டு எண்ணெய் தயாரிப்பு ஆலையை நேரில் பாா்வையிட்ட மாணவிகள் அதன் செய்முறைகள் குறித்து கேட்டறிந்தனா்.
ஆணைக்கட்டிப்பாளையம் பகுதியில் வேலுச்சாமியின் தோட்டத்தில் வெங்காயம், சோளம், நெற்பயிா்கள் குறித்தும் வயல்வெளி பயிற்சி மேற்கொண்டனா். மேலும் முள்ளுக்குறிச்சி பகுதியில், மாணவியா்கள் சீ. ஜோஷிகா, ஜெ. கலைவாணி, சு. கலைவாணி , வே. கலையரசி, ப. கனிமொழி, ப. கனிஷ்காராகவி, ச. கவிநயா ஆகியோா் கிராமப்புற அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி மேற்கொண்டனா்.

