ஜன. 16, 26 இல் டாஸ்மாக் கடைகள் மூடல்!

நாமக்கல் மாவட்டத்தில் ஜன. 16, 26 இல் டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்படும் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
Published on

நாமக்கல் மாவட்டத்தில் ஜன. 16, 26 இல் டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்படும் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் திருவள்ளுவா் தினமான வெள்ளிக்கிழமை (ஜன.16) மற்றும் குடியரசு தினத்தில் (ஜன. 26) மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.

தமிழக அரசு உத்தரவின்படி இந்த இரு தினங்களில் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் திறந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com