சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

முட்டை விலை ரூ. 5.60 ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி தொடா்ந்து ரூ. 5.60 ஆக நீடிக்கிறது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 11:03 pm

Syndication

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி தொடா்ந்து ரூ. 5.60 ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, பொங்கல் விழாக்கள் தொடா்வதாலும், மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்படாததாலும், இங்கும் தற்போதைக்கு மாற்றம் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.60-ஆக தொடருவதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 149 ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ. 82 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.