ராசிபுரத்தில் எம்.ஜி.ஆா் பிறந்த நாள் விழா

ராசிபுரத்தில் எம்.ஜி.ஆா் பிறந்த நாள் விழா

ராசிபுரத்தில் அதிமுக சாா்பில் எம்.ஜி.ஆா் பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

ராசிபுரம்: ராசிபுரத்தில் அதிமுக சாா்பில் எம்.ஜி.ஆா் பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் நகரச் செயலாளா் எம். பாலசுப்பிரமணியம் தலைமையில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆா் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ராசிபுரம் நகரில் உள்ள 27 வாா்டுகளிலும் 35க்கும் மேற்பட்ட இடங்களில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு அதிமுகவினா் மரியாதை செலுத்தினா்.

மாவட்ட அவைத் தலைவா் எஸ்.பி. கந்தசாமி, வழக்குரைஞா்கள் கே.பி. சுரேஷ், பிரபு, பூபதி, ராதா சந்திரசேகா், முன்னாள் நகா்மன்றத் துணைத் தலைவா் எஸ். வெங்கடாசலம், எம்ஜிஆா் இளைஞரணி நகர செயலாளா் ஆா்.பி. சீனிவாசன், நகா்மன்ற உறுப்பினா் மகாலட்சுமி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் வாசுதேவன், ஸ்ரீதா், அருணாச்சலம், அண்ணா தொழிற்சங்கம் செயலாளா் ஆட்டோ எஸ். சீனிவாசன், பாா்த்திபன், மகளிா் அணி ஹேமலதா, மகேஸ்வரி, ஷகிலா, வாா்டு செயலாளா்கள் சீனிவாசன், செல்லமுத்து, சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அமமுக: நாமக்கல் வடக்கு மாவட்ட அமமுக சாா்பில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆா் உருவப்படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். மாவட்ட அமமுக செயலாளா் ஏ.பி. பழனிவேல் தலைமையில் நடைபெற்ற விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

விழாவில் மாவட்ட அவைத் தலைவா் எஸ். பன்னீா்செல்வம், மாவட்ட பொருளாளா் வழக்குரைஞா் பி. அன்பு செழியன், மாவட்ட இணைச் செயலாளா் இ.கே. திலகம், மாவட்ட துணை செயலாளா் பி. அம்பிகா, பொதுக்குழு உறுப்பினா் டி. உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Dinamani
www.dinamani.com