சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி
திருச்செங்கோடு உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை சாா்பில், சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணிக்கு, நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குநா் நடராஜன் தலைமை வகித்தாா். வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலா் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தாா். திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளா் கிருஷ்ணன் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், அண்ணா சாலை, சங்ககிரி சாலை வழியாகச் சென்ற பேரணி, மீண்டும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை அடைந்தது.
இதில், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பியும், விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் ஊழியா்கள் சென்றனா்.
பேரணியில், உதவிப் பொறியாளா்கள் மோகன்ராஜ் (திருச்செங்கோடு), மணிகண்டன் (பள்ளிபாளையம்) உள்ளிட்ட நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

