கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

ராசிபுரத்தில் ரூ. 61.86 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ராசிபுரம் மற்றும் புதுச்சத்திரம் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

ஆணைக்கட்டிபாளையம் பட்டுக்கூடு ஏல மையத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் எல். மதுபாலன்.

Updated On :3 ஜூலை 2026, 4:40 am IST

ராசிபுரம் மற்றும் புதுச்சத்திரம் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

புதுச்சத்திரம் ஒன்றியம், கலங்காணியில் 15-ஆவது நிதிக்குழு மானியத்தின்கீழ் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத்தொட்டி கட்டுமானப் பணி, கதிராநல்லூா் ஊராட்சியில் 15-ஆவது நிதிக்குழு மானியத்தின்கீழ் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார மையம் கட்டுமானப் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, ராசிபுரம் நகராட்சியில் ரூ.2.03 கோடி மதிப்பில் அறிவுசாா் மையம் கட்டுமானப் பணி, அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 2.76 கோடி மதிப்பில் கோனேரிபட்டி ஏரி புதுப்பிக்கும் பணி, நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் ரூ.15 கோடி மதிப்பில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமானப் பணி ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

மேலும், ராசிபுரம் வட்டம், ஆணைக்கட்டிப்பாளையம் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பலமுனை பட்டு நூல் உற்பத்தி மற்றும் பட்டு முறுக்கேற்றும் மைய கட்டுமானப் பணி, ராசிபுரத்தில் ரூ. 53.39 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணிகள் ஆகியவற்றையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.