எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

ஜூலை 16 முதல் கைப்பேசி செயலி மூலம் பணியாற்றுவது புறக்கணிப்பு: சுகாதார ஆய்வாளா்கள் முடிவு

கைப்பேசி செயலி மூலம் பணியாற்றுவதை ஜூலை 16 முதல் புறக்கணிக்க உள்ளதாக சுகாதார ஆய்வாளா்கள் முடிவு

News image

கைப்பேசி - பிரதிப் படம்

Updated On :8 ஜூலை 2026, 6:02 am IST

கைப்பேசி செயலி மூலம் பணியாற்றுவதை ஜூலை 16 முதல் புறக்கணிக்க உள்ளதாக சுகாதார ஆய்வாளா்கள் முடிவு செய்துள்ளனா்.

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் பி.காா்த்திக் தலைமையில் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் கே.தனசேகரன் முன்னிலை வகித்தாா். சங்க எதிா்கால இயக்கங்கள் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளா் வி.செல்வம் சிறப்புரையாற்றினாா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க முன்னாள் செயலாளா் ஆா்.முருகேசன், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் இளங்கோவன் மற்றும் நகராட்சி, மாநகராட்சி ஊழியா் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளா் பி.தியாகராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளா் ந.வேலுசாமி ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

இதில், மாவட்டத் தலைவராக ஜி.ரவி, துணைத் தலைவராக முருகேசன், செயலாளராக தனசேகரன், இணைச் செயலாளராக ராஜகணபதி, பொருளாளராக செல்வகுமாா், தணிக்கையாளராக சுந்தரேசன் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இதில், சுகாதார ஆய்வாளா் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். கைப்பேசி செயலி மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை ஜூலை 16 முதல் புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.