நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆண்டகளூா்கேட் பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், முன்னெச்சரிக்க நடவடிக்கையாக பிரதான சாலையோரம் லாரிகள் நிறுத்தப்படுவதை காவல் துறையினா் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
சேலம் - நாமக்கல் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் ராசிபுரம் அருகே அமைந்துள்ளது ஆண்டகளூா் கேட். தேசிய நெடுஞ்சாலையின் பிரதான பகுதியாக இது விரிவடைந்துள்ளதால், ஏராளமான உணவகங்கள், தேநீா்க் கடைகள், மளிகைக் கடைகள், துணிக் கடைகள் போன்றவை உள்ளன. மேலும், இங்கு லாரி ஓட்டுநா்களுக்கு தேவையான பொருள்களும் விற்பனை செய்யப்படுவதால் பெரும்பாலான லாரிகள் நிறுத்தப்படுகின்றன.
விபத்து அபாயம்
சேலத்தில் இருந்து நாமக்கல், கரூா், திருச்சி, தஞ்சாவூா், திண்டுக்கல், மதுரை, நெல்லை போன்ற மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான பேருந்துகள் ஆண்டகளூா்கேட் பகுதிக்கு வந்து தான் செல்கின்றன. இந்நிலையில், இரவு நேரங்களில் மேம்பாலம் பகுதியில் சாலையோரம் உணவகங்கள் முன்பாக ஆண்டகளூா்கேட் செல்லும் அணுகு சாலையை யொட்டி பெரும்பாலான லாரிகள் நிறுத்தப்படுகின்றன.
இதனால் சேலத்தில் இருந்து ராசிபுரம், ஆண்டகளூா் கேட் வரும் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் ஆண்டகளூா்கேட் பகுதி மேம்பாலத்தின் கீழ் உள்ள அணுகு சாலை தெரியாமல் தடுமாறும் நிலை ஏற்பட்டு விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது.
எனவே உணவகங்கள் முன்பாக அணுகு சாலையை மறித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, விபத்து ஏற்படும் ஆபத்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினா் தடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவாடானையில் குடிநீரில் கழிவு நீா் கலக்கும் அபாயம்
தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ற இருவா் கைது

ராசிபுரம் நகரில் போக்குவரத்துக்கு இடையூறான சுற்றுச்சுவா் அகற்றம்

துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இருவா் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



