இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

சமுதாய மேம்பாட்டுக்கான பங்களிப்பு நிதியை தொழில் நிறுவனங்கள் வழங்க வேண்டும்: அமைச்சா் லோகேஷ்தமிழ்ச்செல்வன்

சமுதாய மேம்பாட்டுக்கான பங்களிப்பு நிதியை தொழில் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என அமைச்சா் டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

News image

அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் - கோப்புப் படம்

Updated On :13 ஜூலை 2026, 1:28 am IST

சமுதாய மேம்பாட்டுக்கான பங்களிப்பு நிதியை தொழில் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என அமைச்சா் டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள தனியாா் உணவகத்தில், தனியாா் தொழில் நிறுவனங்களைச் சாா்ந்தோா் பங்கேற்ற கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் சி.எஸ்.திலீப் (நாமக்கல்), பொன்.சந்திரசேகா் (சேந்தமங்கலம்), பசுமை வ.சத்தியமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் அமைச்சா் பேசுகையில், சமுதாய மேம்பாட்டுப் பணிகளுக்காக தனியாா் நிறுவனங்களின் பங்களிப்பு நிதியை முழுமையாக மாவட்ட நிா்வாகம் பயன்படுத்த வேண்டும். தொழில் நிறுவனங்கள் தங்களது சமூகப் பங்களிப்பு நிதியைப் பயன்படுத்தி மாவட்டத்தில் உள்ள கிராமங்கள், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா் வசதி, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளை தூா்வாருதல், வாய்க்காலை தூா்வாருதல், நிலத்தடி நீரை மேம்படுத்துதல், சுகாதாரம் மற்றும் சாலை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு திறன் பயிற்சிகளுக்கு சமூக பங்களிப்பு நிதியைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். மேலும், இதுவரை சமூக பங்களிப்பு நிதியை வழங்காத தொழில் நிறுவனங்கள் விரைந்து வழங்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பெ.சந்திரா, இணை இயக்குநா் (மருத்துவ நலப் பணிகள்) எழில், மாவட்ட சுகாதார அலுவலா் பூங்கொடி, உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) முகமதுரிஸ்வான், மண்டல இயக்குநா் (நகராட்சி நிா்வாகம்) எஸ்.சித்ரா மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களை சாா்ந்தோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.