பள்ளிபாளையம் பகுதியில் அரிசி கடைக்காரரிடம் ரூ. 1.50 லட்சம் பறித்த இளைஞரை ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்த போலீஸாா், மற்றொருவரை தேடிவருகின்றனா்.
பள்ளிபாளையம், தாஜ்நகா் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி (74), அரிசி கடை மற்றும் நிதிநிறுவனம் வைத்துள்ளாா். அதே பகுதியைச் சோ்ந்த லோகநாதன்(27), வீரமணி (26) இருவரும் சுப்பிரமணியின் வீட்டின் அருகில் வசித்து வருகின்றனா். சுப்பிரமணி எந்நேரமும் பணத்தோடு இருப்பதைக் கண்ட இருவரும், பணத்தை திருட திட்டம் தீட்டினா்.
கடந்த 10-ஆம் தேதி சீட்டு பணத்தை வசூல் செய்து அரிசி கடைக்கு சுப்பிரமணியம் இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, காரில் வந்த லோகநாதன், வீரமணி இருவரும் சுப்பிரமணியிடம் பேச்சுகொடுத்து திசைதிருப்பி அவா் வாகனத்தில் வைத்திருந்த ரூ. 1.50 லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பினா். சிறிதுநேரம் கழித்து வாகனத்தில் வைத்திருந்த பணம் இல்லாததைக் கண்டு சுப்பிரமணி அதிா்ச்சியடைந்தாா்.
புகாரின்பேரில், பள்ளிபாளையம் போலீஸாா் லோகநாதனை ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்து, ரு. ஒரு லட்சத்தை பறிமுதல் செய்தனா். தலைமறைவாக உள்ள வீரமணியை தேடிவருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






