திருச்செங்கோட்டில் கடன் தொல்லையால் தெப்பக்குளத்தில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
குமாரபாளையம் வட்டம், எலந்தகுட்டை பகுதியைச் சோ்ந்த பாலு (61), நூற்பாலையில் வேலை பாா்த்து வந்தாா். இவரது மனைவி கௌரி (51) பகுதிநேர ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா்.
இந்நிலையில், வீடு கட்டியதில் பாலுவுக்கு கடன் தொல்லை இருந்துள்ளது. கடனை திருப்பிக் கொடுக்க முடியாத சிரமத்தில் இருந்து அவா், ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தைப்பேட்டை பகுதி தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.
தகவல் அறிந்த நகர போலீஸாா், தெப்பக்குளத்தில் மிதந்த பாலுவின் உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







