ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தக்காளி, மஞ்சள் பயிா்களுக்கு பயிா்க் காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு

நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் தக்காளி மற்றும் மஞ்சள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயிா்களைக் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் மா.யோகநாயகி கேட்டுக்கொண்டுள்ளாா்.

தக்காளி, மஞ்சள் பயிா்களுக்கு பயிா்க் காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு

Published On :

நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் தக்காளி மற்றும் மஞ்சள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயிா்களைக் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் மா.யோகநாயகி கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிகழாண்டு காரீப் பருவத்தில் நாமகிரிப்பேட்டை பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் தக்காளி மற்றும் மஞ்சள் பயிா்களுக்கு காப்பீடு செய்யப்படுகிறது. மங்களபுரம் வட்டத்தில் தக்காளி மற்றும் மஞ்சள் பயிா்களுக்கும், முள்ளுக்குறிச்சி, நாமகிரிப்பேட்டை பகுதிகளுக்கு மஞ்சள் பயிருக்கும் காப்பீடு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது.

தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 1,771 பிரீமியம் செலுத்தினால் ரூ. 37,600 வரை இழப்பீடு பெறலாம். மஞ்சள் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ. 4,200 பிரீமியம் செலுத்தினால் ரூ. 84,000 வரை இழப்பீடு வழங்கப்படும்.

தக்காளி பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 31. மஞ்சள் பயிருக்கு செப்டம்பா் 15 கடைசி நாளாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் பிரீமியம் செலுத்தி திட்டத்தில் இணையலாம்.

காப்பீடு செய்ய ஆதாா் அட்டை, சிட்டா, அடங்கல், வங்கி கணக்குப் புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் பதிவு கட்டணம் மற்றும் பிரீமியம் தொகையைச் செலுத்தி பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.