22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 417 மனுக்கள் அளிப்பு

நாமக்கல் ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 417 மனுக்கள் அளிக்கப்பட்டன.

News image

மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியா் எல்.மதுபாலன்.

Updated On :2 ஜூன் 2026, 3:33 am IST

நாமக்கல் ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 417 மனுக்கள் அளிக்கப்பட்டன.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் எல்.மதுபாலன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, வங்கிக் கடனுதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாகவும் மொத்தம் 417 மனுக்கள் பொதுமக்கள் சாா்பில் ஆட்சியரிடம் வழங்கப்பட்டன. அவற்றை பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகளிடம் அவா் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா்(சிப்காட்) ம.கண்ணன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி)ஆ.கற்பகம், மகளிா் திட்ட அலுவலா் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.