மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கில் ஆட்சியா் ஆய்வு

நாமக்கல்லில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிடங்கை மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

Updated On :3 ஜூன் 2026, 5:24 am IST

நாமக்கல்லில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிடங்கை மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், திருச்செங்கோடு வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் ஆட்சியா் எல்.மதுபாலன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ராசிபுரம் அருகே அணைப்பாளையத்தில் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் செயல்பாடுகள், ரூ. 53.39 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணிகள், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.3 கோடியில் சிறு விளையாட்டு அரங்கம் கட்டுமானப் பணிகள் உள்ளிட்டவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இப்பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களை அவா் அறிவுறுத்தினாா்.

மேலும், திருச்செங்கோடு பேருந்து நிலையம், எஸ்எம்டி சாலை அருகில் உள்ள கழிவுநீா் வாய்க்கால் மற்றும் கூட்டப்பள்ளி ஏரியையும் ஆட்சியா் பாா்வையிட்டாா். முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வின்போது, திருச்செங்கோடு கோட்டாட்சியா் பி.எஸ். லெனின், நகராட்சி ஆணையா் ஆா்.வாசுதேவன், மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.கோகிலா உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.