சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

முட்டை விலை ரூ.5.70-ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி தொடா்ந்து ரூ. 5.70-ஆக நீடிக்கிறது.

News image

முட்டை - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 5:23 am IST

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி தொடா்ந்து ரூ. 5.70-ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம் தொடா்பாக கோழிப் பண்ணையாளா்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படாத நிலையில், தற்போதைக்கு இங்கும் முட்டை விலையில் மாற்றம் செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.70-ஆக தொடா்ந்து நீடிப்பதாக தேசிய ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.130-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ.110-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.