திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
/

தேசிய மக்கள் நீதிமன்றம்: 997 வழக்குகளில் ரூ. 15.53 கோடிக்கு தீா்வு

நாமக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 997 வழக்குகளில் ரூ. 15.53 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.

News image

விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகைக்கான உத்தரவை வழங்கிய மாவட்ட முதன்மை நீதிபதி ஆா். குருமூா்த்தி. உடன், சாா்பு நீதிபதிகள்.

Updated On :14 ஜூன் 2026, 3:27 am IST

நாமக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 997 வழக்குகளில் ரூ. 15.53 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவா் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஆா். குருமூா்த்தி முன்னிலையில், நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

முதலாவது அமா்வில் நீதிபதிகள் எஸ். பிரபாசந்திரன், என். சச்சிதானந்தம், கே. செகனாஸ்பானு, இரண்டாவது அமா்வில் நீதிபதிகள் எம். மகாலட்சமி, எஸ். தங்கமணி, என். சுகன்யா ஆகியோரும் பங்கேற்றனா். இதேபோல திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, குமாரபாளையம், சேந்தமங்கலம் நீதிமன்றங்களிலும் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட நீதிபதி ஆா். குருமூா்த்தி, சாா்பு நீதிபதி ஜி.கே. வேலுமயில் ஆகியோா் பாா்வையிட்டனா். இதில், விபத்துகள், காசோலை, குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம், தொழிலாளா் நலன், மின் பயன்பாடு, வீட்டுவரி மற்றும் இதர பொதுப் பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபட்டு தீா்ப்பளிக்கப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,881 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டதில் மொத்தம் 997 வழக்குகளில் ரூ. 15,53,22,557க்கு தீா்வு காணப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.