ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

மகளிா் பள்ளியில் நாட்டுநலப்பணி திட்ட மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

பரமத்தி வேலூா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நாட்டுநலப்பணி திட்ட பிளஸ் 1 வகுப்பு மாணவிகளுக்கான புத்தாக்கப் பயிற்சி மற்றும் ஆயத்தப் பயிற்சி பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

மாணவிகளுக்கு பயிற்சி அளித்து பேசிய மாநில தொடா்பு அலுவலா் மு.சௌந்தரராஜன்.

Updated On :18 ஜூன் 2026, 3:04 am IST

பரமத்தி வேலூா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நாட்டுநலப்பணி திட்ட பிளஸ் 1 வகுப்பு மாணவிகளுக்கான புத்தாக்கப் பயிற்சி மற்றும் ஆயத்தப் பயிற்சி பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினா்களாக மாநில தொடா்பு அலுவலா் மு.சௌந்தரராஜன், மாவட்ட தொடா்பு அலுவலா் ஆ.ராமு ஆகியோா் பங்கேற்று மாணவிகளுக்கு நாட்டுநலப்பணி திட்டத்தின் முக்கிய சாராம்சங்கள், மாணவிகள் மேற்கொள்ளவுள்ள சேவை பணிகள் குறித்து விளக்கினா். போதைப் பொருள் தடுப்பு குறித்து தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த செந்தமிழன் விளக்கினாா். வாழ்வியல் திறன்கள், வழிமுறைகள் குறித்து வேலூா் ஜேசிஐ தலைவா் டி.சத்யகுமாா் கூறினாா்.

பள்ளி தலைமை ஆசிரியா் சி.சித்ரா தலைமை வகித்தாா். பிலிக்கல்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டுநலப்பணி திட்ட அலுவலா் மு.பெரியண்ணன், பள்ளி ஆசிரியா்கள் பங்கேற்றனா்.