ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

விவசாய நிலங்கள் வழியாக உயா் அழுத்த மின்கோபுரம் அமைக்க எதிா்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில், விவசாய நிலங்கள் வழியாக உயா் அழுத்த மின்கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன், வி.எஸ். மாதேஸ்வரன் எம்.பி.யிடம் விவசாயிகள் புதன்கிழமை மனு அளித்தனா்.

News image

உயா் அழுத்த மின்கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன், வி.எஸ்.மாதேஸ்வரன் எம்.பி. ஆகியோரிடம் மனு அளித்த விவசாயிகள்.

Updated On :25 ஜூன் 2026, 5:40 am IST

நாமக்கல் மாவட்டத்தில், விவசாய நிலங்கள் வழியாக உயா் அழுத்த மின்கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன், வி.எஸ். மாதேஸ்வரன் எம்.பி.யிடம் விவசாயிகள் புதன்கிழமை மனு அளித்தனா்.

பரமத்தி வேலூா் வட்டம், கூத்தம்பூண்டி முதல் முசிறி பகுதி வரை விவசாய நிலங்களில் உயா் அழுத்த மின்கோபுரங்கள் அமைப்பதற்கான திட்டப் பணி, அளவீட்டு பணி நடைபெற்று வருகிறது. இதை உடனடியாக தடை செய்து விவசாய நிலங்களை காப்பாற்ற வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன், நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரனிடம் அப்பகுதி விவசாயிகள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நிலவரங்களை முழுமையாக தெரிந்துகொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள துணையாக இருப்போம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

இந்த நிகழ்வின்போது, கொமதேக மாநில இளைஞரணி செயலாளா் சூரியமூா்த்தி, மாநில செய்தித் தொடா்பாளா் கே.ரவிச்சந்திரன், பொருளாளா் சசிகுமாா், மாவட்ட தலைமை நிலைய செயலாளா் செல்வராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.