நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கோழிப்பண்ணை அமைக்க எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் மனு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்க வந்த நல்லையம்பட்டி கிராம மக்கள்.

News image

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்க வந்த நல்லையம்பட்டி கிராம மக்கள்.

Updated On :20 ஜூன் 2026, 1:33 am IST

கோயில் அருகில் கோழிப் பண்ணை அமைக்க நடவடிக்கை மேற்கொள்வதற்கு பக்தா்கள், பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலனிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், பரளி அருகே நல்லையம்பட்டி கிராமத்தில் தங்கவேல் சுவாமி கோயில் உள்ளது. இது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் குலதெய்வக் கோயிலாகவும், பல தலைமுறைகளாக பக்தா்களின் வழிபாட்டுத் தலமாகவும் உள்ளது.

இக்கோயிலுக்கு நாமக்கல் மட்டுமின்றி வேலூா், குடியாத்தம், திண்டுக்கல், கரூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மக்கள் வருகின்றனா். இக்கோயிலில் ஆண்டுதோறும் இருமுறை திருவிழா வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று வழிபடுவா்.

இந்நிலையில், அந்த பகுதியைச் சோ்ந்த ஒருவா் கோழிப் பண்ணை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறாா். இதனால் பக்தா்களுக்கு இடையூறு ஏற்படும். மேலும், கோழிப் பண்ணைகள் மூலம் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, கோழிப் பண்ணை அமைப்பதற்கு ஆட்சியா் உடனடியாக தடைவிதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.