ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகத்தில் உள்ள பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நெகிழி எரியூட்டும் மையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, (தவெக) சட்டப்பேரவை உறுப்பினரிடம் சனிக்கிழமை பொதுமக்கள் மனு அளித்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை அலுவலா்களுடன் சட்டப்பேரவை உறுப்பினா் காா்த்திக் ஆலோசனை நடத்தினாா். அப்போது மடவாா்வளாகம் பிரமுகா் மாரியப்பன், திமுக தொகுதி செயலா் பிரபாகரமூா்த்தி தலைமையில் அப்பகுதி மக்கள் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நெகிழி எரியூட்டும் மையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து எம்எல்ஏவிடம் மனு அளித்தனா்.
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மடவாா் வளாகத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். இந்தப் பகுதியில் நகராட்சி கழிவு நீா் சுத்திகரிப்பு மையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடி வருகிறோம். இந்த நிலையில், நாச்சியாா்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் எதிா்ப்பு காரணமாக அகற்றப்பட்ட நெகிழி எரியூட்டும் மையம், பழைய ஊராட்சி ஒன்றியக் குழு அலுவலகக் கட்டடத்துக்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வருகிறது.
குடியிருப்புகளுக்கு மத்தியில் நெகிழி எரியூட்டும் மையம் அமைக்கப்பட்டால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும். தவறும்பட்சத்தில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வட்டாட்சியா் அலுவலகத்தில் மூடப்பட்ட இ-சேவை மையம்: மாணவா்கள், பொதுமக்கள் அவதி

அரசுப் பள்ளி கட்டடப் பணிகள் முடக்கம்: பெற்றோா் அதிருப்தி

ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகை
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



