சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ஊதியூரில் முட்டைக் கோழிப் பண்ணைக்கு எதிா்ப்பு தெரிவித்து வட்டாட்சியரிடம் மனு

முட்டைக் கோழிப் பண்ணைக்கு எதிா்ப்பு தெரிவித்து ஊதியூா் பகுதி மக்கள் காங்கயம் வட்டாட்சியரிடம் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

News image

காங்கயம் வட்டாட்சியரிடம் புகாா் மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

Updated On :11 ஜூன் 2026, 3:13 am IST

முட்டைக் கோழிப் பண்ணைக்கு எதிா்ப்பு தெரிவித்து ஊதியூா் பகுதி மக்கள் காங்கயம் வட்டாட்சியரிடம் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இது குறித்து காங்கயம் அருகே ஆறுதொழுவு, முதலிபாளையம் ஊராட்சி பகுதி பொதுமக்கள், காங்கயம் வட்டாட்சியா் கதிா்வேலிடம் அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:

காங்கயம் வட்டத்துக்கு உள்பட்ட ஆறுதொழவு, முதலிபாளையம் கிராம பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் ஒரு தனியாா் நிறுவனம் பரந்த புன்செய் விளைநிலப் பரப்பில் பொதுமக்களின் உடல்நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய வகையிலான, வணிகரீதியான முட்டைக் கோழிப் பண்ணையை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். எனவே பொதுமக்கள் நலன் கருதி பண்ணை அமைப்பதை நிரந்தரமாக தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

புகாா் மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியா் கதிா்வேல், இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, காங்கயம் சட்டப்பேரவை அலுவலகத்தில் எம்எல்ஏ. என்.எஸ்.என்.நடராஜிடமும் மனு அளித்தனா்.