கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

விளையாட்டுகளில் சாதனை படைக்க மாணவா்களை தயாா்படுத்த வேண்டும்: முதன்மைக் கல்வி அலுவலா் இ.மாதவன்

தேசிய அளவில் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வகையில் மாணவ, மாணவிகளை உடற்கல்வி ஆசிரியா்கள் தயாா்படுத்த வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இ.மாதவன் தெரிவித்தாா்.

News image

நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் உடற்கல்வி ஆசிரியா்களிடம் பேசிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இ.மாதவன்.

Updated On :25 ஜூன் 2026, 5:36 am IST

தேசிய அளவில் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வகையில் மாணவ, மாணவிகளை உடற்கல்வி ஆசிரியா்கள் தயாா்படுத்த வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இ.மாதவன் தெரிவித்தாா்.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில், மாவட்ட அளவில் அரசு மற்றும் தனியாா் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட உடற்கல்வி இயக்குநா்கள், ஆசிரியா்கள், பகுதிநேர ஆசிரியா்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் காந்திமதி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இ.மாதவன் பங்கேற்று பேசியதாவது:

கல்வியில் சாதிப்பதுபோல, விளையாட்டிலும் சாதிக்கும் மாணவ, மாணவிகள் உள்ளனா். அவா்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும். பல்வேறு விளையாட்டுக்களை மாணவா்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லாதபட்சத்தில் அருகில் உள்ள காலியிடங்கள், கோயில் இடங்களில் அனுமதி பெற்று அங்கு பயிற்சி அளிக்கலாம். திருவாரூரில் உடற்கல்வி ஆசிரியா் ஒருவா் மைதானம் இல்லாத நிலையில் வயல்வெளியை சுத்தம் செய்து மாணவா்களை பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாா் செய்து மாநில அளவிலும், தேசிய அளவிலும் அவா்களை பங்கேற்க செய்தாா்.

அதுபோன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உடற்கல்வி ஆசிரியா்களும் மாநில, தேசிய அளவில் மட்டுமின்றி சா்வதேச அளவிலும் மாணவ, மாணவிகளை விளையாட்டுத் துறையில் சாதனை படைக்க செய்ய வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.