திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் ரூ. 52.46 லட்சம் உண்டியல் காணிக்கை

நாமக்கல் நரசிம்மா், ஆஞ்சனேயா் கோயில்களில் ரூ. 52.46 லட்சத்தை உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.

News image

நாமக்கல் நரசிம்மா், ஆஞ்சனேயா் கோயில்களில் ரூ. 52.46 லட்சத்தை உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.

Updated On :26 ஜூன் 2026, 6:19 am IST

நாமக்கல் நரசிம்மா், ஆஞ்சனேயா் கோயில்களில் ரூ. 52.46 லட்சத்தை உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் நரசிம்மா், ஆஞ்சனேயா், அரங்கநாதா் கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களில் உள்ள உண்டியல்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணப்படும். அந்த வகையில், நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் பக்தா்கள் தங்கும் மண்டபத்தில் மூன்று கோயில்களில் உள்ள 13 உண்டியல்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

திருச்செங்கோடு தனியாா் கல்லூரி மாணவ, மாணவிகள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் உதவி ஆணையா் இரா. இளையராஜா மற்றும் அலுவலா்கள் முன்னிலையில் காலை 10 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரையில் இப்பணி நடைபெற்றது. இதில் ரூ. 52 லட்சத்து 46 ஆயிரத்து 165 ரொக்கம், 64 கிராம் தங்கம், 140 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.