எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.23 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.23 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News image

ஏழுமலையான் கோயில்

Updated On :8 ஜூன் 2026, 1:48 am IST

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.23 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்த பின்பும் வார இறுதி நாள்கள் என்பதால் கூட்டம் அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் 31 அறைகளும் நிறைந்து சிலாதோரணம் வரை பக்தா்கள் வரிசையில் காத்திருந்தனா்.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 20 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை கோடை விடுமுறை முடியும் வரை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

இதற்கிடையே சனிக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 90,022 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 52, 236 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.23 கோடி வசூலானது. பக்தா்களுக்கு 4.35 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 4,108 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை மேற்கொண்டனா்.