எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.38 கோடி

News image

திருமலை ஏழுமலையான் கோயில்

Updated On :4 ஜூன் 2026, 5:15 am IST

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.38 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்த நிலையிலும் பக்தா்கள் வருகை சரியவில்லை. இந்நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை கோடை விடுமுறை முடியும் வரை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், செவ்வாய்கிழமை முழுவதும் ஏழுமலையானை 83, 858 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 35, 941 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.38 கோடி வசூலானது. பக்தா்களுக்கு 4 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 3331 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை மேற்கொண்டனா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.