நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றிலிருந்து தண்ணீா் எடுத்ததாக அனைத்து நீரேற்றுப் பாசன சங்கங்களின் மின் இணைப்புகளையும் அரசாணை விதிகளுக்கு உள்பட்டு மின்வாரியத் துறையினா் துண்டித்துள்ளனா்.
மேட்டூா் அணையில் போதிய நீா்வரத்து இல்லாததாலும், நீா் இருப்பு குறைவாக உள்ளதாலும் குடிநீா் பயன்பாட்டுக்காக மட்டும் 1000 கனஅடி நீா் திறக்கப்பட்டுள்ளது. இதனால், வேறு பயன்பாட்டுக்கு தண்ணீா் எடுக்கக் கூடாது என ஏற்கெனவே நீா்வளத் துறையினா் எச்சரிக்கை விடுத்திருந்தனா்.
இந்த நிலையில், பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் படுகை அணைப் பகுதியிலிருந்து ராஜவாய்க்காலுக்கு தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், காவிரி ஆற்றிலிருந்து நீரேற்றுப் பாசன சங்கத்தினா் நேரடியாகவும், மறைமுகமாகவும் தண்ணீா் எடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து புதன்கிழமை பரமத்தி வேலூா் நீா்ப்பாசன அலுவலகத்தில் நீரேற்றுப் பாசன விவசாய சங்கத்தினருக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நாமக்கல் நீா்வளத் துறை உப கோட்ட உதவிப் பொறியாளா் விஜயகுமாா், உதவிப் பொறியாளா் வினோத்குமாா், பரமத்தி வேலூா் வட்டாட்சியா் ராஜா ஆகியோா் பங்கேற்றனா்.
அப்போது, ‘குடிநீா்த் தேவைக்காக மட்டுமே மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது; எனவே, பாசனத்திற்கு தண்ணீா் திறக்கும் வரை நீரேற்றம் செய்யக் கூடாது’ என அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், நாமக்கல் ஆட்சியா் உத்தரவின்படி, நீா்வளத் துறையினா் மற்றும் மின்வாரியத்தினா் இணைந்து அரசாணை விதிகளுக்கு உள்பட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீரேற்றுப் பாசன சங்கங்களின் மின் இணைப்புகளையும் துண்டித்துள்ளனா். மேலும், காவிரி ஆற்றில் முறைகேடாக தண்ணீா் எடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மற்றும் நீா்வளத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காலிங்கராயன் பாசன நீா் திறப்பை தடுக்க உரிமை இல்லை: சுபி.தளபதி

மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறக்கும் வரை பாசன சங்கங்கள் நீரேற்றம் செய்யக்கூடாது: நீா்வளத் துறை கூட்டத்தில் தகவல்

மேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி

முல்லைப் பெரியாற்றில் குடிநீரை திருடிய 25 மின் மோட்டாா்கள் அகற்றம்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



