தேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

காா் மீது மோதிய லாரி; ஓட்டுநரை தாக்கியவா் கைது

பரமத்தி வேலூா் அருகே காா் மீது லாரி மோதியதால் ஏற்பட்ட தகராறில் லாரி ஓட்டுநரைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :22 மார்ச் 2026, 8:34 pm

Syndication

பரமத்தி வேலூா் அருகே காா் மீது லாரி மோதியதால் ஏற்பட்ட தகராறில் லாரி ஓட்டுநரைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலத்தில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை கீரம்பூா், பரமத்தி, பரமத்தி வேலூா் பகுதிகளில் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்லையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலை வழியாக பரமத்தி வேலூருக்குள் வாகனங்கள் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேலூா் பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் கீராபிரகாஷ் (எ) பிரகாஷ் (26) சென்று கொண்டிருந்த காா் மீது கபிலா்மலை செல்லும் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் ஜேடா்பாளையம் அருகே ஆனங்கூா் காட்டுவளவு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் பாலசுப்பிரமணியம் (46) ஓட்டிவந்த சிமெண்ட் கலவை லாரி மோதியது.

இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் சாலையிலே காரை நிறுத்திவிட்டு லாரி ஓட்டுநா் பாலசுப்பிரமணியத்தை தாக்கினாராம். இதில் காயமைடந்த பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த வேலூா் போலீஸாா் பிரகாஷை கைது செய்தனா்.

இந்த தகராறு காரணமாக பரமத்தி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு சாலையில் நின்றன. போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா்.