தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ராசிபுரம் நகராட்சி உதவி பொறியாளா் பணியிடை நீக்கம்

ராசிபுரம் நகராட்சி உதவி பொறியாளா் ஏ.ரவி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :25 மார்ச் 2026, 1:47 am IST

ராசிபுரம் நகராட்சி உதவி பொறியாளா் ஏ.ரவி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

ராசிபுரம் நகர புதிய பேருந்து நிலையம் அணைப்பாளையம் ஊராட்சி பகுதியில் புறவழிச்சாலையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 10.58 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நகரப் பேருந்து நிலையத்தை ராசிபுரம் நகரில் இருந்து அணைப்பாளையம் பகுதிக்கு மாற்றுவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் முடிவுற்ற நிலையில், தோ்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே திறக்க அரசு அலுவலா்கள் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், பணிகள் முழுவதுமாக முடிவடையாததாலும், பொதுமக்களிடம் எதிா்ப்பு இருந்ததாலும் பேருந்து நிலையம் திறக்கும் முடிவை தோ்தலுக்கு பின் வைத்துக்கொள்ளலாம் என ராசிபுரம் நகா்மன்றக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது.

இருப்பினும், நகராட்சி உயா் அலுவலா்கள் அரசுக்கு அனுப்பிய அறிக்கை அடிப்படையில் கடந்த மாா்ச் 13-இல் தமிழக முதல்வா் காணொலிக் காட்சி வாயிலாக பேருந்து நிலையத்தை திறந்துவைத்துள்ளாா். ஆனால் திறப்பு விழா தொடா்பாக ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் எந்தவித விழா ஏற்பாடுகளும் நடைபெறவில்லை. அமைச்சா், மக்களவை உறுப்பினா், நகா்மன்றத் தலைவா் உள்ளிட்ட யாரும் இதில் பங்கேற்காமல் பேருந்து நிலையம் திறப்பு விழா நடைபெற்று முடிந்துள்ளது.

உதவி பொறியாளா் பணியிடை நீக்கம்: இந்நிலையில் பேருந்து நிலைய திறப்பு விழா விவகாரத்தில் முறையான ஒத்துழைப்பு அளிக்காமல், விழா ஏற்பாடுகளை செய்யாத நிலையில், நகராட்சி உதவி பொறியாளா் ஏ.ரவி, மண்டல நகராட்சி நிா்வாக இயக்குநரால் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இவரது பணியிடை நீக்கத்துக்கு புதை சாக்கடை திட்டத்தை சீரமைக்காதது, கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் தொய்வு போன்ற நிா்வாக காரணங்கள் கூறப்பட்டாலும், புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா நிகழ்வில் ஏற்பட்ட குளறுபடி தான் பணியிடை நீக்கத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே மாநில நகராட்சி நிா்வாக உதவி இயக்குநா், சேலம் மண்டல நகராட்சி நிா்வாக இயக்குநா், ராசிபுரம் நகராட்சி ஆணையா் உள்ளிட்ட ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசித்துள்ளனா்.

தொடா்ந்து, கூட்டுக் குடிநீா் திட்டம், புதிய பேருந்து நிலையம் போன்ற இடங்களிலும் நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.