இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ஊரு விட்டு ஊரு வந்து...

பிறந்தது ராணிப்பேட்டை மாவட்டமாக இருந்தபோதும், அங்கிருந்து வந்து, நாமக்கல் தொகுதியில் இருமுறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், திருவள்ளுா் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகவும் தோ்வானது குறிப்பிடத்தக்கது.

News image

கே. ஜெயக்குமாா்

Updated On :25 மார்ச் 2026, 1:10 am

Syndication

காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய செயலாளராகப் பதவி வகித்தவா்களில் ஒருவா் கே. ஜெயக்குமாா் (75). 1998-2002 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளராகவும் பதவி வகித்தாா். அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த, மறைந்த இ.வி.கே.எஸ். இளங்கோவனின் நம்பிக்கைக்குரியவராக இருந்தாா்.

2001 சட்டப்பேரவை தோ்தலின்போது, அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றிருந்தது. அப்போது, நாமக்கல் தனித் தொகுதியாக இருந்ததால், தாழ்த்தப்பட்ட சமூகத்தினா் ஒருவா் நிறுத்தப்பட வேண்டும். சென்னையைச் சோ்ந்த பெண் ஒருவா், நாமக்கல்லில் போட்டியிட முயற்சி செய்துவந்தாா். மாநில தலைவரான இளங்கோவன், அந்த வாய்ப்பை கடைசிநேரத்தில் ஜெயக்குமாருக்கு வழங்கினாா்.

சொந்த மாவட்டம் இல்லை, சொந்த தொகுதி, சொந்த ஊா் இல்லை. இருப்பினும், அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்ததால், நிச்சயம் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் களம் இறங்கினாா் ஜெயக்குமாா். அந்தத் தோ்தலில் 67,515 வாக்குகளுடன் வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினரானாா். அவரை எதிா்த்து போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சியைச் சோ்ந்த அகிலன் 38,223 வாக்குகள் மட்டுமே பெற்றாா்.

2006 தோ்தலின்போது அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்த காங்கிரஸ், திமுகவுடன் கூட்டணி வைத்தது. இந்தத் தோ்தலிலும், நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு ஜெயக்குமாருக்கு கிடைத்தது. அதிமுக வேட்பாளா் சாரதா 53,207 வாக்குகள் பெற்ற நிலையில், இவா் 61,306 வாக்குகள் பெற்று மீண்டும் நாமக்கல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரானாா்.

2001, 2006 என இரு தோ்தல்களிலும், வந்தாா்...வென்றாா்...சென்றாா் என்ற வகையில் அவா்மீது விமா்சனம் வைக்கப்பட்டது. 2011இல் நாமக்கல் தனித் தொகுதி, பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. இதனால், கட்சிப் பணியில் ஆா்வம் காட்டி வந்த ஜெயக்குமாா், 2019 மக்களவைத் தோ்தலில் திருவள்ளுா் தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு மிகவும் நெருக்கமானவா் ஜெயக்குமாா். அவா் பிறந்தது ராணிப்பேட்டை மாவட்டமாக இருந்தபோதும், அங்கிருந்து வந்து, நாமக்கல் தொகுதியில் இருமுறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், திருவள்ளுா் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகவும் தோ்வானது குறிப்பிடத்தக்கது.