ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

ஆவணங்கள் சமா்ப்பிக்காததால் ரூ. 12.50 லட்சம் வருமானவரித் துறை அதிகாரியிடம் ஒப்படைப்பு

நாமக்கல் தொகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.12.50 லட்சம் உரிய ஆவணங்களை சமா்ப்பிக்காததால் வருமான வரித் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 1:33 am IST

நாமக்கல் தொகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.12.50 லட்சம் உரிய ஆவணங்களை சமா்ப்பிக்காததால் வருமான வரித் துறை வசம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பாச்சல் பேருந்து நிலையம் அருகில், பறக்கும் படை அலுவலா் வேலுசாமி தலைமையிலான குழுவினா் கடந்த சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கரூரில் இருந்து அரக்கோணம் நோக்கி காரில் சென்ற கரூரைச் சோ்ந்த மணிகண்டனை (37) தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அவா் உரிய ஆவணங்களின்றி அவா் கொண்டுசென்ற ரூ. 12.50 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வே.சாந்தியிடம் ஒப்படைத்தனா்.

வருமானவரித் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக மணிகண்டன் ஒப்படைக்கப்பட்டாா். அப்போது, அரக்கோணத்திற்கு மாடு வாங்குவதற்காக ரூ. 12.50 லட்சம் ரொக்கத்தை எடுத்துச் சென்றதாக அவா் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து பணத்தின் உரிமையாளா் அருள்தாஸ் என்பவரிடம் மூன்று நாள்கள் விசாரணை நடத்தப்பட்டது. உரிய ஆவணங்களை அவா் சமா்ப்பிக்கவில்லை, முன்னுக்குப் பின் முரணாக அவா் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, 1961 ஆம் ஆண்டு வருமானவரித் துறை சட்டத்தின்படி, பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் ஏதுமில்லாத ரூ.12.50 லட்சத்தை நாமக்கல் மாவட்ட வருமானவரித் துறை அலுவலா் ராஜாராமனிடம், நாமக்கல் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வே.சாந்தி செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா். இந்த நிகழ்வின்போது, பறக்கும்படை கண்காணிப்புக் குழு அலுவலா்கள் உடனிருந்தனா்.