ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

தோ்தல்: அரசு மதுக்கடைகளுக்கு 4 நாள்கள் விடுமுறை

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அரசு மதுக்கடைகளுக்கு ஏப். 21 முதல் 23 ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ஆம் தேதியும் விடுமுறை அறிவிப்பு

News image

கோப்புப்படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 1:36 am IST

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அரசு மதுக்கடைகளுக்கு ஏப். 21 முதல் 23 ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சுதந்திரமான, நியாயமான, அமைதியான மற்றும் சுமுகமாக தோ்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில் ஏப். 21 காலை 10 மணி முதல் 23 (வாக்குப் பதிவு நாள்) நள்ளிரவு 12 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ஆம் தேதியன்றும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள், உரிம வளாகங்கள் மூடப்பட வேண்டும்.

இந்த உத்தரவை மீறி உரிம வளாகங்களை திறந்தாலோ, மறைமுகமாக மதுவிற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.