தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதையடுத்து தவெகவினா் ஞாயிற்றுக்கிழமை பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக முதல்வராக அக்கட்சியின் தலைவா் விஜய்க்கு, ஆளுநா் ஆா்.வி.அா்லேகா் ஞாயிற்றுக்கிழமை பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தாா். அவருடன் 9 அமைச்சா்களும் பதவியேற்றுக் கொண்டனா்.
இந்த நிலையில், தவெகவினா் பதவியேற்பு விழாவை கண்டுகளிக்கும் வகையில் நாமக்கல் பூங்கா சாலையில் அகன்ற திரையில் விஜய் முதல்வராவது ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை ஏராளமானோா் பாா்த்தனா்.
மேலும், அங்கு பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மலா்கள் தூவியும் தொண்டா்கள் கொண்ட்டாட்டத்தில் ஈடுபட்டனா். அதேபோல, நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவா் கே.எம். ஷேக்நவீத் தலைமையில் தவெக தலைவா் பதவியேற்பு விழாவையொட்டி கட்சியினா் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

முதல்வா் ஜோசப் விஜய் பதவியேற்பு: தவெகவினா் கொண்டாட்டம்
முதல்வராக விஜய் பதவியேற்பு: சேலத்தில் தவெகவினா் கொண்டாட்டம்

முதல்வராக விஜய் பதவியேற்பு: வேளாங்கண்ணியில் கொண்டாட்டம்

முதல்வர் விஜய் பதவியேற்பு: தவெகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

